துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய மற்றும் பலர் நடித்து 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியான படம் 'மயக்கம் என்ன'.
இப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. தனுஷ், ரிச்சா ஆகியோரின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது.
தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமான ரிச்சா அடுத்து சிம்பு ஜோடியாக 'ஒஸ்தி' என இரண்டே இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்தார். தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி படிப்பதற்காக அமெரிக்கா சென்று உடன் படித்த அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவைப் பற்றி அடிக்கடி எதுவும் கேட்க வேண்டாம் என்று சொல்லும் ரிச்சா 'மயக்கம் என்ன' படத்தின் கதாபாத்திரமான யாமினி கதாபாத்திரத்தை மறக்க முடியாமல் இன்று படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.
“மயக்கம் என்ன' 9 ஆண்டுகள் நிறைவானதை நம்பவே முடியவில்லை. ரீல் வாழ்க்கையிலிருந்து ரியல் வாழ்க்கைக்கு எனது வாழ்க்கையை எனது ஆர்வங்களைத் தொடர்வதற்கு, நிஜ வாழ்க்கையில் அந்தப் படத்திலிருந்து ஒரு பக்கத்தை எடுத்துக் கொண்டுவிட்டேன் என்றே நினைக்கிறேன். எந்த வருத்தமும் இல்லை, இதுவரையில் வாழ்க்கையில் எதைப் பற்றிய வருத்தமும் இல்லை.
'மயக்கம் என்ன' ரசிகர்களுக்கு, நிஜ வாழ்க்கையில் நான் தான் கார்த்தி, ஜோ (கணவர்) தான் யாமினி. திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது, 4 வருடங்கள் ஒன்றாக இருந்தாலும், அவர் எப்போதும் எனக்கு ஆதரவளிப்பார். அதுவே ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒவ்வொருவருக்கும் ஒரு தோழமையாக இருக்கும். உங்களுக்கும் அப்படி கிடைக்கட்டும்,” என நினைவு கூர்ந்துள்ளார்.