மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில், நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், த்ரிஷா, சமந்தா, தமன்னா, ஹன்சிகா, ஓவியா, ஸ்ருதிஹாசன், இவர்களை அடுத்து, வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி என, பலரும் மூத்த நடிகையரே. இதில், காஜலுக்கு சமீபத்தில் தான் திருமணமானது. திருமணமானாலும் தொடர்ந்து நடிப்பேன் எனக் கூறியுள்ளார். நயன்தாராவின் காதல் கதை, அனைவருக்கும் தெரியும். அனுஷ்கா, த்ரிஷா, தமன்னா, வரலட்சுமி என பலர், 35 வயதை கடந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானோர், சினிமாவில், 10 -- 15 ஆண்டுகளுக்கு மேலாக, நாயகியாக பயணித்து வருகின்றனர். இன்றும், இவர்கள் தான், தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். இவர்களுக்கு அடுத்து வர வேண்டிய நடிகையரில், கீர்த்தி சுரேஷ் தவிர, மற்ற யாரும் இன்னும் திறமைசாலிகளாக கண்டறியப்படவில்லை. திறமையான நடிகையருக்கு பற்றாக்குறையா அல்லது வாய்ப்புகள் தரப்படுவதில்லையா அல்லது பாலியல் சீண்டல் பிரச்னையா? என்பதற்கான பதிலை, கோலிவுட்டில் தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.