பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி அவருக்கு மும்பையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின் கணவர் கௌதம் கிச்லுவுடன் தன் தேனிலவைக் கொண்டாட மாலத் தீவிற்குச் சென்றுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அங்கு அவர் தங்கியுள்ளார். முடிந்தவரையில் ஒவ்வொரு நாளும் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.
காஜல் சென்றதைப் பார்த்துத்தான் மற்ற நடிகைகளான வேதிகா, ரகுல்ப்ரீத் சிங், சமந்தா ஆகியோரும் அங்கு சென்றிருப்பார்கள் போலிருக்கிறது. வேதிகா தனது தனிமைப் படங்களை மட்டுமே பகிர்ந்தார், ரகுல் குடும்பத்துடனும், சமந்தா கணவர் நாக சைதன்யாவுடனும் சென்றார்கள். ரகுல் ப்ரீத் அடுத்து அமிதாப்புடன் ஹிந்திப் படத்தில் நடிக்க வேண்டி இருப்பதால் திரும்பிவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால், காஜல் அகர்வாலுக்கு தேனிலவை விட்டு திரும்பிவர ஆசை இல்லை போலிருக்கிறது.