'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகனாக இருக்கும் தனுஷ் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'அத்ராங்கி ரே' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஹிந்தியில் அறிமுகமான 'ராஞ்சனா' படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் இது.
இப்படத்தில் அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்றுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
தற்போது கடைசிகட்டப் படப்பிடிப்பு டில்லியில் நடந்து வருகிறது. அது பற்றிய தகவலை வெளியிட்டு தன்னுடைய கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் தனுஷ். கடைசியாக 'பட்டாஸ்' படத்தில் பார்த்த தனுஷுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தன்னுடைய உடற்கட்டை நன்றாக ஏற்றியிருக்கிறார் தனுஷ் என்று மட்டும் தெரிகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜெகமே தந்திரம்' படம் அடுத்து வெளிவர உள்ளது. தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். விரைவில் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.