Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனைவி மக்களுடனே மடிந்து விட வேண்டும் - பார்த்திபன்

24 நவ, 2020 - 18:05 IST
எழுத்தின் அளவு:
Parthiban-tweet-about-chennai-rain-Nivar-cyclone

நிவர் புயல் மற்றும் சென்னை மழை குறித்து நடிகர் பார்த்திபன் டுவிட்டரில், ''ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும், சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன். அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விட வேண்டும். சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு + அர்த்தங்கெட்ட வேகமது. காலை நாலு மணிக்கு எழுந்து வாசலில் வந்து அமர்ந்தேன். நாலா பக்கமும் இடி சத்தம். ஒவ்வொருவரும், வெவ்வேறு நாலா திசையில் எந்த பதட்டமும் இல்லை.

என் மகள் கீர்த்தனாவுடன் குறுஞ்செய்தி பகிர்வு. காத்திருந்த கன்று ஒன்று கயிற்றிலிருந்து விடுபட்டு, தாயின் வயிற்றில் முட்டுவது போல என் விரல்கள் தட்ட, அடுத்த முனையில் மகள் கீர்த்தனா. ஒரு நாயும், மூன்று பூனைகளும் இடி சத்தத்தில் பயந்து ஒளிந்துக் கொள்வதாக வருந்தினார். (அன்றைய என் நிலையில் இன்று இன்னெருவர்) மரக்கிளைகளில் படும் மழைத்துளிகளின் சப்த பின்னணியில் மனம்+ரணம் இல்லா மரணம் வரை பேசினோம்.

அந்நேரம் முதியவர் குளிர் நடுங்க பால் போட வந்தார். பேச்சை நிறுத்தி “டீ குடிச்சிட்டுப் போங்க” என்றேன். குனிந்து பாக்கட்டை வைக்காமல் (கூன் இருந்ததால்) நின்ற நிலையிலேயே வைத்தார். ”முடியாத வயசுலேயும் சம்பாதிக்க வேண்டியிருக்கு” ஏன் ஐயா! பசங்க யாருமில்லையா?”-அவர் “நான் கல்யாணமே பண்ணிக்கலயே” என்றார். நிவர் வருகிறதாம்! வர்தாவை விட வேகத்தில் வருதாம். முன் ஜாக்கிரதை நிவாரன பணிகள் அறிவிக்கப்பட்ட இடங்களிலும் செய்தல் அவசியம். அவசியமின்றி வெளி செல்ல வேண்டாம். கடந்தே தீரும் எதுவும்/இதுவும்!'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஷாரூக், அக்ஷய்குமாரை பின்னுக்குத் தள்ளிய சோனு சூட்ஷாரூக், அக்ஷய்குமாரை பின்னுக்குத் ... ரெஜினாவின் "ப்ளாஷ்பேக்" ரெஜினாவின் "ப்ளாஷ்பேக்"

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

VIDHURAN - chennai,இந்தியா
30 நவ, 2020 - 11:04 Report Abuse
VIDHURAN உண்மை தான் மனைவி மக்களுடன் மட்டும் அல்ல பாசம் காட்டும் ஒருவரை கூட விட்டு தனியே இருக்க இயலாது என்பது உண்மை ஒரு வார்த்தைக்கு மனைவி மக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் திரு பார்த்திபன். பிரிவு என்பது பிரிந்தபின்பே உணரக்கூடியது. யாருக்கும் அந்த சோகம் வரக்கூடாது என்பது பேராசைதான். ஆனாலும் அந்த ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதே உண்மை.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
28 நவ, 2020 - 07:11 Report Abuse
Bhaskaran Manai iyaa thuraththivitta magaanubaavar
Rate this:
Sri - Ghisin,கோஸ்டாரிகா
25 நவ, 2020 - 19:37 Report Abuse
Sri Annaivarkum kannadasan sonna mathri veedhi varai uravu. Kadaisi varai yaro....sugaboga vazhkai...annaithutum pesum
Rate this:
25 நவ, 2020 - 17:01 Report Abuse
murphys law manaiviyaaa????
Rate this:
25 நவ, 2020 - 17:01 Report Abuse
murphys law manaiviyaaa????
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ponniyin Selvan
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in