Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷாரூக், அக்ஷய்குமாரை பின்னுக்குத் தள்ளிய சோனு சூட்

24 நவ, 2020 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Sonu-Sood-overtakes-bollywood-superstars

சினிமாவில் நாயகர்களாக நடிப்பவர்களை நல்லவர்கள் என்றும், வில்லன்களாக நடிப்பவர்களைக் கெட்டவர்கள் என்றும் நினைக்கும் குணம் இன்னும் சிலரிடம் இருக்கிறது. அந்த சிலரின் மனதையும் தன்னுடைய சேவை குணத்தால் மாற்றியவர் சோனு சூட் என்றால் அது மிகையில்லை.

கொரோனா தொற்று காலத்தில் தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து பல உதவிகளைச் செய்திருக்கிறார். அவருடைய உதவி செய்யும் மனப்பான்மைக்கு பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

டுவிட்டரில் எந்த பிரபலத்தின் டுவீட்டுகள் அதிகம் சென்றடைகிறது என்பது குறித்த ஆய்வு முடிவுகளை அடிக்கடி வெளியிடும் டிவிட்டீட் என்ற நிறுவனம் அக்டோபர் மாதத்திய முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில் அக்ஷய்குமார், ஷாரூக்கான் போன்ற ஹிந்தி முன்னணி நடிகர்களை பின்னுக்குத் தள்ளி சோனு சூட் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய டுவீட்டுகள் 2.4 மில்லியன் மக்களிடம் சென்றடைந்துள்ளன.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி, விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு நான்காவது இடத்தை சோனு சூட் பிடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மழையைக் கொண்டாடும் சாக்ஷி அகர்வால்மழையைக் கொண்டாடும் சாக்ஷி அகர்வால் மனைவி மக்களுடனே மடிந்து விட வேண்டும் - பார்த்திபன் மனைவி மக்களுடனே மடிந்து விட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

BalaG -  ( Posted via: Dinamalar Android App )
25 நவ, 2020 - 15:25 Report Abuse
BalaG அந்த தகுதி இவருக்கு இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in