பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தமிழ் சினிமாவின் அழகிய காதல் ஜோடி எனப் பெயரெடுத்தவர்கள் பிரசன்னா, சினேகா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். குடும்பப்பாங்கான அழகான நடிகையான சினேகாவின் கணவராக இருந்தாலும் பிரசன்னா தீவிர சிம்ரன் ரசிகர். அதை பல சந்தர்ப்பங்களில் அவரே தெரிவித்திருக்கிறார்.
இன்று(நவ., 24) சிம்ரன் அவருடைய டுவிட்டரில் பட்டுப்புடவையுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். “சேலையின் நேர்த்தியும், அதன் தரமும் ஒப்பிட முடியாதவை. சேலையில் முதல் பார்வையிலேயே என்னுடைய காதல்,” எனவும் பதிவிட்டிருந்தார்.
அந்த டுவீட்டைப் பார்த்ததும் பிரசன்னா, 'மேம்...போங்க மேம்...'” என 'ஹார்ட்டின்' விட்டிருக்கிறார். பிரசன்னாவின் 'அழகில் மயங்கிய' டுவீட்டைப் பார்த்து ரசிகர்கள், மனைவி சினேகாவிடம் சிக்கப் போறீங்க என கிண்டலடித்துள்ளனர்.