‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! |
தென்னிந்தியத் திரையுலகில் அதிக தியேட்டர்கள், அதிக வசூலுடன் இருப்பது தெலுங்குத் திரையுலகம். அங்குள்ள ரசிகர்கள் இன்னமும் தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதை திருவிழாவாகத்தான் கொண்டாடி வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கால் தெலங்கானா மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தது. அவற்றை உடனடியாகத் திறந்து கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. திரையுலகினருக்கு மேலும் பல சலுகைகளை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். சமீபத்தில் அவரை சீனியர் தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோர் சந்தித்து பல கோரிக்கைகளை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டிய ஜிஎஸ்டியை மீண்டும் பெறுதல், தியேட்டர் காட்சிகளை அதிகரித்தல், சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப நிர்ணயித்தல், ஸ்டுடியோக்கள் கட்ட நிலம், மின்சார கட்டணத்தில் சலுகைகள், சினிமா தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டைகள் உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வருக்கு தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்கள்.