சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
ஆப் கே ஆ ஜானே சே, மேரி ஹனிகரக் பிவி, கிளாஸ் ஆப் 2020 உள்பட புகழ்பெற்ற ஹிந்தி தொடர்களில் நடித்தவர் லீனா ஆச்சார்யா. கொரோனா ஊரடங்குகாலத்தில் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் வீட்டில் முடங்கி கிடந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 30.
கடந்த சில வருடமாக அவருக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்துள்ளது. அதற்காக சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்துள்ளது. அவரது தாய் அவருக்கு சிறுநீரக தானம் செய்துள்ளார்.
இதுபற்றி நெருங்கிய நண்பர்களுக்கு கூட அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், புதிதாக பொருத்தப்பட்ட சிறுநீரகமும் செயல் இழந்ததாதால் மரணம் அடைந்துள்ளார். லீனாவின் மரணம் இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.