பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் பிரபலமானவர் டிஎஸ்கே. பெட்ரோமாக்ஸ் படத்திற்கு முன்பே கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்திருந்தாலும் பெட்ரோமாக்ஸ் படம் தான் அவருக்கு அறிமுகத்தை கொடுத்தது.
தற்போது சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்கும் படத்தில் அவருக்கு நண்பராக நடித்து வருகிறார். ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராஜசரவணன் என்பவர் இயக்கும் படத்தில் பரத், லாஸ்லியா, பூர்னேஷ் ஆகியோருடன் நடிக்கிறார். யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டீகே தற்போது இயக்கியுள்ள ஆந்தாலஜி படதில் இடம்பெற்றுள்ள, ஐந்து குறும்படங்களில், பேன்டஸி கலந்த காமெடி படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ், சரத்குமார் நடித்துள்ள அடங்காதே படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர போலீஸ் பின்னணியில் உருவாகியுள்ள புனிதன் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். பாபி ஜார்ஜ் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.