பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்தார் இப்போதும் தொடர்ந்து படங்களில் நடிக ஆர்வம் காட்டி வரும் ஆஷா சரத் சமீபத்தில்தான் 'த்ரிஷ்யம் 2' படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து அவர் நடிக்க உள்ள புதிய படம் 'கெட்டா'.
ஏற்கனவே அமீபா மற்றும் கெஞ்சிரா என 2 படங்களுக்காக கேரள அரசு விருது பெற்ற இயக்குனர் மனோஜ் கண்ணா இந்த படத்தை இயக்குகிறார் இந்த படத்தின் பூஜை இன்று ஆழப்புழாவில் நடைபெற்றது இதில் என்ன விசேஷம் என்றால், இந்த படத்தில் ஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அம்மாவைப் போலவே இவரும் நடனத்தில் வல்லவர். பிட்ஸ் பிளானியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.