பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாக தயாராகி வரும் படம் குறூப். துல்கர் சல்மானை மலையாள திரையுலகில் முதன்முதலாக அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் பல வருடங்களுக்கு முன்பு பிரசித்திபெற்ற திருடன் சுகுமார குறூப் என்பவரின் வழக்கையும் வாழ்க்கையையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி உள்ளது
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் இந்த படத்தை வெளியிடலாம் என தீர்மானித்து வைத்திருந்தார் துல்கர் சல்மான். சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், “தற்போதைக்கு கேரளாவில் தியேட்டர்களை திறக்கும் எண்ணமில்லை, எப்போது திறக்கப்படும் என்று உறுதியாக சொல்ல முடியாது” என கூறியிருந்தார். இதையடுத்து வேறுவழியின்றி இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளார் துல்கர் சல்மான்.