சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
'பிக் பாஸ்' சீசன் 4 நிகழ்ச்சியின் 4வது வெளியேற்றமாக பின்னணிப் பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா நேற்று வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு நுழைவாக 28வது நாளில் வீட்டுக்குள் நுழைந்தார் சுசித்ரா.
திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பதால் அவரை இந்த சீசனுக்குள் அனுப்பி வைத்தனர். சர்ச்சைகளின், சண்டைகளின் மறு உருவமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்துவார் சுசி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வீட்டிலுள்ள பலரும் அவருடன் நெருக்கமாகப் பழகுவதைத் தவிர்த்தனர்.
ஆனால், அனிதா, சனம், ஆரி, பாலா, கேபி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே அவருடன் நட்புடன் பழகினர். நேற்று வீட்டை விட்டு வெளியேறிய பின் வீட்டிலுள்ளவர்களைப் பற்றி கமல்ஹாசன் கேட்டதும் சுசித்ரா அவர்களைப் பற்றி வெளுத்து வாங்கிவிட்டார்.
அர்ச்சனா தலைமையில் ஒரு குழுவும், சம்யுக்தா தலைமையில் மற்றொரு குழுவும் தனித்னியே செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், நள்ளிரவு நேரங்களில் அந்தக் குழுவினர் போடும் திட்டங்கள் அனைத்தும் தனக்குத் தெரியும் என்றார்.
சுசி வீட்டை விட்டு வெளியேறும் சமயத்தில் அவரை வழியனுப்பக் கூட அர்ச்சனா குழுவினர் மிகவும் தாமதமாகவே வெளியில் வந்தனர். வீட்டை விட்டு வெளியேறும் சுசிக்கு ஆறுதல் சொல்வதைவிட காப்பாற்றப்பட்ட சம்யுக்தாவுக்குத்தான் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்தவரையில் ரசிகர்களின் பாராட்டையும் அதிகம் பெறாத சுசித்ரா, நேற்று வெளிப்படையாக சொன்ன விமர்சனங்களின் காரணமாக இன்று ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். அதோடு, அர்ச்சனா குழுவினரையும் காட்டமாக திட்டி வருகிறார்கள்.