Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : முரளி ராமசாமி வெற்றி

23 நவ, 2020 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Producer-council-election-:-Murali-ramasamy-got-victory

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2020 - 22ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. ஓட்டளிக்க தகுதியான 1300 பேர்களில் 1050 பேர் ஓட்டளித்தனர்.

இந்தத் தேர்தலில் நலன் காக்கும் அணி சார்பில் ராமசாமி என்கிற முரளி தலைமையில் போட்டியிடும் அணிக்கும், பாதுகாப்பு அணி சார்பில் டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிடும் அணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

மேலும், தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பி.எல்.தேனப்பன், துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் சிங்காரவேலன், கதிரேசன், பொருளாளர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் ஜே.எஸ்.சதீஷ் குமார் ஆகியோரும் அணிகள் சார்பாகப் போட்டியிடுபவர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளனர். இதுதவிர 21 செயற்குழு உறுப்பினர்களுக்கு 94 பேர் போட்டியிடுகின்றனர்.

பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. இதில் முதலில் தலைவர் பதவிக்கான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் தேனாண்டாள் முரளி ராமசாமி வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 1050 ஓட்டுகளில் முரளிக்கு 557, டி.ராஜேந்தருக்கு 388, தேனப்பனுக்கு 88 ஓட்டுகள் கிடைத்தன. 17 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 169 ஓட்டுகள் வித்தியாசத்தில் முரளி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர், தேனப்பன் தோல்வியை தழுவினர்.



துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ் (முரளி அணி), கதிரேசன் (சுயேச்சை) வெற்றிப் பெற்றனர். கவுரவ செயலாளர்களாக ராதாகிருஷ்ணன் (முரளி அணி), மன்னன் (டி.ஆர். அணி) வெற்றிப் பெற்றனர். பொருளாளர் பதவிக்கான ஓட்டு எண்ணிக்கையில் சந்திர பிரகாஷ் ஜெயின் (முரளி அணி) வெற்றி பெற்றார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாலகிருஷ்ணா படத்திலிருந்து சாயிஷா விலகல்?பாலகிருஷ்ணா படத்திலிருந்து சாயிஷா ... இப்படித்தான் வழியனுப்புவீர்களா, அர்ச்சனா குழு மீது ரசிகர்கள் காட்டம் இப்படித்தான் வழியனுப்புவீர்களா, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
23 நவ, 2020 - 18:09 Report Abuse
Bhaskaran நாட்டின் தலையாய பிரச்னை தீர்ந்துவிட்டது
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
23 நவ, 2020 - 12:52 Report Abuse
Allah Daniel ஈ வீ ம் மெஷின் பிரச்சனையால் தோல்வினு சொல்லிடுங்க.. அதுதான் இப்ப ட்ரெண்டு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in