துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா தற்போது பொயப்பட்டி சீனு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். கொரானோ தொற்றுக்குப் பிறகு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தபின் இனிதான் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள்.
இப்படத்தின் நாயகிகளில் ஒருவராக சாயிஷா இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டடார். அவருக்கு ஜோடியா சாயிஷாவா என திரையுலகிலேயே ஆச்சரியப்பட்டார்கள். இதனிடையே, தற்போது சில தனிப்பட்ட காரணங்களைச் சொல்லி இப்படத்திலிருந்து சாயிஷா விலகிவிட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
சில தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்துள்ள பிரக்யா ஜெய்ஸ்வால் தற்போது நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். முதலில் 'பிசாசு' படத்தில் நாயகியாக நடித்த பிரக்யா மார்ட்டின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரை மாற்றிவிட்டுத்தான் சாயிஷா வந்தார். இப்போது அவரும் போய் பிரக்யா ஜெய்ஸ்வால் வந்துள்ளார். மேலும், மலையாள நடிகையான பூர்ணா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தை அடுத்த சில மாதங்களில் முடித்து 2021 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.