Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிக்பாஸ்' - அடுத்து ஒரே வாரத்தில் 2 பேர் வெளியேற்றம் ?

23 நவ, 2020 - 10:03 IST
எழுத்தின் அளவு:
Bigboss-next-week-may-be-2-elemination

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நேற்றுடன் 50வது நாளை எட்டியுள்ளது. 100 நாள் நிகழ்ச்சி என்று சொல்லப்பட்டாலும் அதற்கு மேலும் சில நாட்கள் நிகழ்ச்சி நடந்து பின் இறுதிச்சுற்று நடக்கும்.

50 நாள் நிகழ்ச்சியில் இதுவரையில் ஏழு வாரங்கள் கடந்துவிட்டது. இதற்குள் குறைந்தது 6 பேராவது நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகிய நான்கு பேர் மட்டுமே வெளியேறி இருக்கிறார்கள். கடந்த வாரம் தீபாவளி என்பதால் யாரையும் வெளியேற்றவில்லை.

இன்னும் உள்ள 50 நாட்களில் 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதாவது, ஏழு வாரங்களில் 10 பேராவது வெளியேற வேண்டும். வாரத்திற்கு ஒருவர் என்றால் அது முடியாது, எனவே ஏதாவது ஒரு சில வாரங்களில் இருவர் வெளியேறினால் மட்டுமே இறுதிப் போட்டியில் 4 பேர் பங்கேற்க முடியும்.

இதனிடையே, வைல்டு கார்டு மூலம் மேலும் ஒரு சிலர் நுழையலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்னும் அப்படி நடக்கவில்லை. இதற்கு முந்தைய சீசன்களில் முதல் சீசனில் 52, 53, 54வது நாட்களில் தலா ஒருவர் என மூன்று பேர் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளனர். இரண்டாவது சீசனில் 67வது நாளில் ஒருவர் நுழைந்துள்ளார். அவர்களில் ஒரு சிலர் இறுதிப் போட்டி வரையிலும் சென்றுள்ளனர். எனவே, இனிவரும் நாட்களிலும் இந்த சீசனில் யாராவது நுழைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நேற்று 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்று சொல்லித்தான் கமல்ஹாசன் நிகழ்ச்சியை முடித்துவைத்தார். அது அடுத்தடுத்து நடக்க வாய்ப்புள்ளது என்றே தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
காஜல் அகர்வாலைக் காப்பியடிக்கும் ரகுல், சமந்தாகாஜல் அகர்வாலைக் காப்பியடிக்கும் ... பாலகிருஷ்ணா படத்திலிருந்து சாயிஷா விலகல்? பாலகிருஷ்ணா படத்திலிருந்து சாயிஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

saravan - bangaloru,சவுதி அரேபியா
24 நவ, 2020 - 17:03 Report Abuse
saravan வீட்டுக்குள்ளேயே வளைகாப்பெல்லாம் வச்சி அனுப்பிவிடுங்கள்....
Rate this:
23 நவ, 2020 - 18:42 Report Abuse
raghasrin நாடு தற்போது ததத்தளிக்கும் நிலையில் மல்லின் இந்த பட்டரை அவசிமா? ???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in