Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசன் முடிவில் திடீர் மாற்றம்?

22 நவ, 2020 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Changes-in-kamal-decision

கமல்ஹாசன் நடித்து கடைசியாக 2018 ஆகஸ்ட்டில் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. அந்தப்படம் எந்த ஒரு வரவேற்பையும் பெறாமல் வந்து போனது.

அப்படத்திற்குப் பின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதோடு, சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தலைவன் இருக்கின்றான் படத்தையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டார். அப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கப் போவதையும் அறிவித்தார்.

இந்நிலையில் மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் டீசரையும் சமீபத்தில் வெளியிட்டார்கள்.

இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்களைத் தள்ளி வைத்துவிட்டு விக்ரம் படத்தில் கமல் நடித்து முடிப்பார் என எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தியன் 2 படத்தைத் தயாரிப்பு நிறுவனம் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கவில்லை என்றால் வேறு படத்தை இயக்கும் முடிவில் இயக்குனர் ஷங்கர் இருந்ததாகத் தகவல் வெளியானது.

அதன்பின் இந்தியன் 2 பற்றிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தர சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். அதன்பிறகே விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த குழப்பங்களுக்கிடையில் கமல்ஹாசன் 2016ல் அமெரிக்காவில் படப்பிடிப்பை ஆரம்பித்த சபாஷ் நாயுடு படம் என்ன ஆனது என்றுதான் தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்கள் வருகை இல்லை : மூடத் தயாராகும் தியேட்டர்கள்ரசிகர்கள் வருகை இல்லை : மூடத் ... மாலத்தீவிற்கு கணவருடன் சென்ற சமந்தா மாலத்தீவிற்கு கணவருடன் சென்ற சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
23 நவ, 2020 - 13:19 Report Abuse
Sridhar தேர்தலுக்கு அப்புறம் தாங்க அவருக்கு ஒரு தெளிவு கிடைக்கும். நோட்டாவுடன் அவர் போராட்டம் வெற்றிபெற்றவுடன் மீண்டும் வந்து எல்லா படங்களையும் நடித்துக்கொடுப்பார். நோட்டாவுடன் தோற்றால், தயாரிப்பாளர்களுக்கு திண்டாட்டம்தான் என்ன ஆனாலும் அவருக்கு பிக் பாஸ் இருக்கவே இருக்கு.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23 நவ, 2020 - 12:14 Report Abuse
Ramesh R மக்கள் நீதி மய்யம் ஷூட்டிங் கூட போக வேண்டும்
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
23 நவ, 2020 - 01:23 Report Abuse
sankar லோகேஷ் ராகுல் எடுக்கிற விக்ரம் ரெண்டுவின் கதாநாயகன் சபாஷ் நாயுடு அவன் தலைவைனாக உருவாகிறான் அந்த தைலவன் பெயர் மறுத்த நாயஹம் எல்லா படமும் வந்திருச்சா . இந்த தா விக்ரம் ரெண்டு படப்பிடிப்பு ஆரம்பிச்சவுடனே ஏலக்காசன் முடிஞ்சிரும் அப்புறம் தலைவன் இருந்தானுக்கு சொல்லிட்டு பிக் பாஸுக்கு போயிருவாரு அவ்வளவுதானா அப்புறம் சிகப்பு ரோஜாக்கள் ரெண்டு ஆரம்பிக்க போறேன் என்பார் இப்படி போயிகிட்டே இருக்கும் நல்ல இளிச்சவாய் தயாரிப்பாளன் கிடைக்கும் வரை
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
22 நவ, 2020 - 21:30 Report Abuse
S. Narayanan அரசியல் சினிமா கிடையாது.
Rate this:
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
22 நவ, 2020 - 18:55 Report Abuse
Ponniyin Selvan முதலில் அரசியலா சினிமாவான்னு குழப்பம், சினிமாவில் சொந்த படமா மத்த படமான்னு குழப்பம், அதிலும் கைவிட்ட படமா ஆரம்பிக்காத படமான்னு குழப்பம்.... இவருதான் வந்து தமிழ்நாட்டை நிமிர்த்த போறாராமாம்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in