சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
கமல்ஹாசன் நடித்து கடைசியாக 2018 ஆகஸ்ட்டில் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. அந்தப்படம் எந்த ஒரு வரவேற்பையும் பெறாமல் வந்து போனது.
அப்படத்திற்குப் பின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதோடு, சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தலைவன் இருக்கின்றான் படத்தையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டார். அப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கப் போவதையும் அறிவித்தார்.
இந்நிலையில் மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் டீசரையும் சமீபத்தில் வெளியிட்டார்கள்.
இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்களைத் தள்ளி வைத்துவிட்டு விக்ரம் படத்தில் கமல் நடித்து முடிப்பார் என எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தியன் 2 படத்தைத் தயாரிப்பு நிறுவனம் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கவில்லை என்றால் வேறு படத்தை இயக்கும் முடிவில் இயக்குனர் ஷங்கர் இருந்ததாகத் தகவல் வெளியானது.
அதன்பின் இந்தியன் 2 பற்றிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தர சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். அதன்பிறகே விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த குழப்பங்களுக்கிடையில் கமல்ஹாசன் 2016ல் அமெரிக்காவில் படப்பிடிப்பை ஆரம்பித்த சபாஷ் நாயுடு படம் என்ன ஆனது என்றுதான் தெரியவில்லை.