Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்கள் வருகை இல்லை : மூடத் தயாராகும் தியேட்டர்கள்

22 நவ, 2020 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Theatres-to-be-closed

இந்தியாவில் கொரானோ தொற்று ஆரம்பக் கட்டத்தில் பரவிய உடனேயே நாட்டில் உள்ள தியேட்டர்களை மூடு அரசு உத்தரவிட்டது. சுமார் ஏழு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் அக்டோபர் மாதத்தில் நாட்டின் பல மாநிலங்களில் திறக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் கடந்த 10ம் தேதி முதல் திறக்கப்பட்டது. இருப்பினும் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் பல சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தீபாவளிக்கு சில புதிய படங்கள் வந்தாலும் அப்போது மட்டும் சில தியேட்டர்களில் ரசிகர்கள் வருகை தந்தனர். அதன்பின் வார நாட்களில் ரசிகர்கள் வருகை மிகமிகக் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் வருகை எதிர்பார்த்த அளவு இல்லாத காரணத்தால் நஷ்டத்தைத் தாங்க முடியாதென பல தியேட்டர்களை மூட திட்டமிட்டுள்ளார்களாம். 10 பேர், 20 பேர், அதிகபட்சமாக 50 பேர் வரையில்தான் ரசிகர்கள் வருகிறார்கள். 50 பேர் என்றால் ஒரு டிக்கெட்டுக்கு சராசரியாக 150 ரூபாய் என்றால் கூட 7500 ரூபாய் தான் ஒரு காட்சிக்கு வசூலாகும். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு சில காட்சிகளில் தான் இப்படி 50 பேர் வருகிறார்களாம்.

பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாலாவது ரசிகர்கள் வருவார்கள். ஆனால், சிறிய நடிகர்களின் படங்கள், சிறிய பட்ஜெட் படங்களைப் பார்க்க அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. மக்களுக்கு கொரானோ பயம் முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே, நஷ்டத்தை இனியும் தொடர முடியாது என தியேட்டர்களை தற்காலிகமாக மூடி வைக்க பலர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சிம்பு பட நடிகை சனா கான் திடீர் திருமணம்சிம்பு பட நடிகை சனா கான் திடீர் ... கமல்ஹாசன் முடிவில் திடீர் மாற்றம்? கமல்ஹாசன் முடிவில் திடீர் மாற்றம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

23 நவ, 2020 - 12:35 Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ உலகில் பல விசயங்கள் இல்லாமல் நம்மால் இருக்க முடியும் என்று கொரோனா நிரூபித்துள்ளது, மேலும் அதன் பால் உள்ள ஈர்ப்பு நம்முடைய உபயேகமான பல மணித்துளிகளை வீணடிக்கிறது, அதைத் தவிர்த்தால் நம் வாழ்க்கையில் எத்தனையோ முன்னேற்றம் காண இயலும் என்ற சிந்தையையும் கொண்டுவந்துள்ளது, அதில் ஒன்று சினிமா. தமிழகத்தில் தவிர்க்க இயலாத ஒரு ஊடு பொருளாக இருந்த மக்கள் மனதை நேரத்தை சிதைக்கும் குப்பை சினிமாக்களின் அழிவு ஒரு நல்ல தொடக்கத்திற்க்கான ஆரம்பப் புள்ளி,
Rate this:
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
22 நவ, 2020 - 21:10 Report Abuse
Anbu Tamilan Very good news. Better convert all theatres as commercial halls. My heartiest wishes
Rate this:
22 நவ, 2020 - 20:53 Report Abuse
ilaiyaraja muthu மொத்தமா மூடிட்டு வேற வேலை பாருங்க டா.... கருணாநிதி குடும்பத்தோட கருப்பு பணமாவது குறையட்டும்
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
22 நவ, 2020 - 19:50 Report Abuse
swa மூடுவது நல்லதுஅடிச்ச கொள்ளைக்கு நல்லா அனுபவிங்க
Rate this:
jagan - Chennai,இலங்கை
22 நவ, 2020 - 19:10 Report Abuse
jagan சொரியா (சரியாதான் எழுதி இருக்கேன்) மாதிரி ஜாதி வன்மம் தூண்டும் (சூரரை போற்று ) மாதிரி படங்கள் தான் இன்னும் வருது. மூடி தொலையட்டும்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in