Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவா டாக்டரை மறுமணம் செய்தது உறுதியானது

21 நவ, 2020 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Family-members-confirmed-Prabhudevas-second-marriage

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் கமர்ஷியல் இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் பிரபுதேவா. தனது அப்பா நடன இயக்குனர் சுந்தரத்திடம் உதவி மாஸ்டராகப் பணிபுரிந்து 90களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் விளங்கியவர். பின்னர் இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் படங்களை இயக்கியுள்ளார்.

பிரபுதேவாவுக்கும் அவரது நடனக் குழுவில் இருந்த ரமலத் என்பவருக்கும் பல வருடங்களுக்கு முன்பே ரகசியத் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார். எந்த ஊரில் இருந்தாலும் தனது இரண்டு மகன்களையும் சந்திக்க அடிக்கடி சென்னை வருவார் பிரபுதேவா.

சில வருடங்களுக்கு முன்பு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் தீவிர காதல் இருந்தது. அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்திற்கும் மாறினார் நயன். மேலும் தனது கையில் 'பிரபு' என்றும் டாட்டூ குத்திக் கொண்டார். ஆனால், இருவரும் திடீரெனப் பிரிந்துவிட்டார்கள்.

கடந்த சில வருடங்களாக சில நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டார் பிரபுதேவா. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி தற்போது டாக்டர் ஹிமானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரபுதேவா மும்பையில் இருந்த போது அவருக்கு சிகிச்சை அளிக்க வந்தவர்தான் பிஸியோதெரபிஸ்ட்டான ஹிமானி. சிகிச்சை அளிக்க வந்தவர் காதலில் சிக்கிக் கொண்டார்.

இருவரது திருமணமும் கடந்த மே மாதத்தில் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. அந்த செய்தி தற்போது தான் வெளியில் வந்துள்ளது. இதை பிரபுதேவாவின் அண்ணனும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரமும் உறுதி செய்துள்ளார். பிரபுதேவாவின் மறுமணம் அவர்களது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
'மாநாடு' பர்ஸ்ட் லுக் வெளியீடு'மாநாடு' பர்ஸ்ட் லுக் வெளியீடு சசிகலா பற்றிய படம், ராம்கோபால் வர்மா புதுத் தகவல் சசிகலா பற்றிய படம், ராம்கோபால் வர்மா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

vns - Delhi,யூ.எஸ்.ஏ
28 நவ, 2020 - 04:07 Report Abuse
vns வெட்கம் கேட்ட பிரபலங்கள்
Rate this:
23 நவ, 2020 - 11:31 Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ இதெல்லாம் என்ன ஜூஜூபி,
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
22 நவ, 2020 - 19:45 Report Abuse
 Muruga Vel கூந்தல் இருக்கறவுங்க கொண்டையும் போட்டுக்கலாம் பின்னல் போட்டுக்கலாம் ...
Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
22 நவ, 2020 - 16:24 Report Abuse
SaiBaba ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது, கூடாது. அந்த அநாகரீக செயலுக்கு இந்தியர்கள் மிகவும் பிரசித்தம். பிரபு தேவா திருமணமே செய்யக்கூடாது என்பது சட்டமா? பொருந்தாத திருமணங்கள் செய்துவைத்து அதிலேயே கண்டிப்பாக வாழ்ந்து சாக வேண்டும் என்று எழுதப்படாத சட்டங்கள் உள்ள வரையில் நம் நாட்டில் யாருமே நிம்மதியாக வாழ முடியாது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
23 நவ, 2020 - 06:24Report Abuse
 Muruga Velதன்னுடன் நடனமாடிய ரமலத்தை காதல் திருமணம் செய்து ...மூணு குழந்தைகளுக்கு பிறகு பொருந்தா திருமணம் ஆகிவிட்டதா...
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22 நவ, 2020 - 04:26 Report Abuse
Mani . V சரி, அடுத்த திருமணம் எப்போ? அதை சொல்லுங்க முதலில்.
Rate this:
Manian - Chennai,ஈரான்
22 நவ, 2020 - 07:32Report Abuse
Manianபொண்ணு பாத்துக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நாள் டயம் கொடுங்க இந்த பூவிலே இன்னும் கொஞ்சம் தேன் இருக்குதே ~...
Rate this:
தமிழன் - Chennai,சவுதி அரேபியா
22 நவ, 2020 - 10:21Report Abuse
தமிழன்கல்யாணம் தானே பண்ணிருக்கார் . கூட்டிட்டு ஓடலியே? பின்னே ஏன் உங்களுக்கு காண்டு ? சக்தி இருக்கிறவன் பண்ணிக்கறான் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in