ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் |
பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் 50 நாட்களை நெருங்க இருக்கிறது. போட்டியாளர்கள் அரை கிணற்றைத் தாண்டி விட்டார்கள். இதுவரை ரேகா, வேல் முருகன் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்டு எண்ட்ரிக்களாக உள்ளே சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இந்த வாரம் ரியோ, ஆரி, பாலா, சம்யுக்தா, அனிதா மற்றும் சுசி ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் உள்ளனர்.
இவர்களில் இந்த வாரம் சுசி தான் வெளியேற இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் சுசியால் இதுவரை சுவாரஸ்யமாக பிக் பாஸ் வீட்டில் சண்டை எதுவும் நடைபெறவில்லை என்பது தான். சர்ச்சைகளுக்குப் பேர் போன அவர், பிக் பாஸ் வீட்டிலும் பரபரப்பை ஏற்படுத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ ஒவ்வொரு போட்டியாளரிடமும் ஏதாவது அறிவுரை கூறுவது அல்லது பேட்டி எடுக்கும் ஸ்டைலில் பேச்சு அல்லது கேமராவுக்கு முன் நின்று புலம்பல் என்று தான் பிக் பாஸ் வீட்டில் நாட்களைக் கழித்து வருகிறார்.
அதனால் அவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என சமூகவலைதளங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் யூகம் தெரிவித்து வருகின்றனர்.