இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து | உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் | மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம் | மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய பிரியதர்ஷன் - லிசி |
இந்தியத் திரையுலகம் கொரானோ தொற்று காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் அக்டோபர் மாதம் முதல் சில மாநிலங்களிலும், நவம்பர் மாதம் முதல் சில மாநிலங்களிலும் திறக்கப்பட்டன. தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகியவற்றில் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கடந்த வாரம் தீபாவளியன்று சந்தானம் நடித்த 'பிஸ்கோத்' படமும் வெளியானது. முதல் இரண்டு நாட்கள் அரசு அனுமதித்த 50 சதவீத இருக்கைகள் பெரும்பாலான தியேட்டர்கள் நிரம்பியதால் தியேட்டர்காரர்கள் மகிழ்ந்தனர். அதே சமயம், வார நாட்களில் 10 சதவீத இருக்கைகள் கூட நிரம்பவில்லை.
இந்த கொரானோ காலத்தில் சில படங்கள் நேரடியாக டிஜிட்டல் தளங்களில் வெளியாகின. ஆனால், தியேட்டர்களில் வெளியான ஒரு படத்தைக் குறைந்தது 50 நாட்களுக்குப் பிறகுதான் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவார்கள். ஆனால், 'பிஸ்கோத்' படத்தை இரண்டு வாரங்களுக்குள்ளாகவே டிஜிட்டல் தளத்தில் வெளியிட உள்ளார்கள்.
நவம்பர் 26 முதல் இப்படம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் அதிகாரப்பூர்வமாக சிம்ப்ளி சௌத் என்ற இணையதளம், மொபைல் ஆப்புகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள். அப்படி வெளிவந்தால் உடனடியாக நல்ல தரத்திலான பைரசி பிரின்ட்டுகள் வெளியாகிவிடும். அது தியேட்டர் வசூலை கடுமையாகப் பாதிக்கும்.
ஏற்கெனவே, படத்தை வெளியிட்டு லாபம் பார்க்க முடியாத தியேட்டர்காரர்கள் இரண்டு வாரங்களுக்குள்ளான டிஜிட்டல் வெளியீடு கடும் பாதிப்பைத் தரும் என கோபத்துடன் இருக்கிறார்கள். இரண்டு வாரங்கள் கழித்து டிஜிட்டல் தளத்தில் வெளியிட முடிவு செய்தவர்கள் தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாகவே ஓடிடியில் வெளியிட்டிருக்கலாமே எனத் தெரிவிக்கிறார்கள்.