எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து 90களில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் மீனா. தற்போது ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'த்ரிஷ்யம் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நேற்று ரஜினிகாந்த் மற்றும் பாலகிருஷ்ணாவுடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்தார். தெலுங்கு ரசிகர்கள் அந்தப் படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிவிட்டனர்.
கோதண்டராமரெட்டி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, மீனா நடித்து 1994ம் ஆண்டு வெளிவந்த படமான 'பொப்பிலி சிம்மம்' படத்தின் பூஜை நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. ராஜமுந்திரியில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அப்படத்திற்கு பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியுள்ளார். அவரது மகனும் இன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி அந்தப் படத்தில் அப்பாவிற்கு உதவியாளராக வேலை பார்த்துள்ளார் என்பத கூடுதல் தகவல்.
ரஜினிகாந்தைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரிக்கும் மீனாவைப் பார்த்ததும் ரஜினி ரசிகர்களுக்கு 'முத்து' படம்தான் ஞாபகத்திற்கு வரும்.