Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிரடி சலுகைகளை அறிவிக்கும் தியேட்டர்கள்

21 நவ, 2020 - 10:49 IST
எழுத்தின் அளவு:
Theatres-owners-annoucing-offers

கொரானோ தொற்றால் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் தமிழ்நாட்டில் கடந்த வாரம் திறக்கப்பட்டன. தீபாவளி முதல் புதிய படங்களுடன் பெரும்பாலான தியேட்டர்கள் செயல்பட ஆரம்பித்தன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அனுமதி அளித்த 50 சதவீத இருக்கைகள் பல தியேட்டர்களில் நிரம்பியதால் தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால், வார நாட்களில் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மிக மிகக் குறைந்த அளவே மக்கள் தியேட்டர்களுக்கு வருகை புரிந்தனர். தீபாவளிக்கு வெளியான பிஸ்கோத், இரண்டாம் குத்து படங்கள் ஓரளவிற்கு வசூல் செய்து தப்பித்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். இருப்பினும் அது நடக்கவில்லை.

இதன் காரணமாக சென்னையில் உள்ள சில தியேட்டர்கள் அதிரடி சலுகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். ஒரு படத்திற்கு டிக்கெட் வாங்கினால் இன்னொரு படம் இலவசம் என்று சென்னையில் உள்ள காசி டாக்கீஸ், ஜிகே சினிமாஸ் அறிவித்துள்ளார்கள். சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்தி வரும் எஜிஎஸ் சினிமாஸ் ஏற்கெனவே டிக்கெட் விலையைக் குறைத்திருந்தார்கள். தற்போது உணவுப் பொருட்கள், குளிர்பானங்களுக்கு 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளார்கள்.

இப்படி சலுகைகள் அறிவித்த பின்னரும் மக்கள் வருவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றிமாறனுக்கு பெயர் கிடைக்குமா?வெற்றிமாறனுக்கு பெயர் கிடைக்குமா? பழைய போட்டோவை வைரலாக்கிய மீனா பழைய போட்டோவை வைரலாக்கிய மீனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
22 நவ, 2020 - 08:15 Report Abuse
VENKATASUBRAMANIAN இப்போது தெரிகிறதா தியேட்டர்கள் எப்படி கொள்ளையடிக்கிறார்கள். எல்லா விலையையும் ஏற்றி விட்டு இப்போது 50% offer என்று கூறுகிறார்கள். யாரும் தியேட்டருக்கு போகக்கூடாது. அவர்களே விலையை குறைத்து விடுவார்கள்
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
21 நவ, 2020 - 21:04 Report Abuse
Indhuindian தீபாவளி சலுகையாக ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் மற்றும் கொரோனா இலவசம். முந்துங்கள் இது குறுகிய கால சலுகை. எப்பிடியும் இன்னும் கொஞ்ச நாள்ல இந்த தீயேட்டர்லாம் காணாம போயிடும்.
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
21 நவ, 2020 - 20:51 Report Abuse
S. Narayanan டிக்கெட் இலவசமாக கொடுத்தாலும் மக்கள் வர மாட்டார்கள்.
Rate this:
Nisha Rathi - madurai,இந்தியா
21 நவ, 2020 - 17:38 Report Abuse
Nisha Rathi மக்கள் தியேட்டருக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் நமது புண்ணியவான் தமிழ் ராக்கர்ஸ் இருக்கும் போது நாம் ஏன் தியேட்டருக்கு செல்ல வேண்டும்
Rate this:
giri - madurai  ( Posted via: Dinamalar Windows App )
21 நவ, 2020 - 14:26 Report Abuse
giri Get one tiicket and get one corona freeeee
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in