சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
சுதா கோங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்து கடந்த வாரம் ஓடிடியில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. தனியார் விமான நிறுவனமாக இருந்த 'ஏர் டெக்கான்' நிறுவனத்தை ஆரம்பித்த கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய புத்தகமான 'சிம்ப்ளி பிளை' என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் 'சூரரைப் போற்று'.
படம் ஓடிடியில் வெளியான பிறகு படத்தைப் பற்றி பாராட்டி டுவீட் செய்திருந்தார் கோபிநாத். படத்தைப் பார்த்த சிலர் வாழ்க்கை வரலாற்றுப் படம் போல இல்லை, சினிமாத்தனம் அதிகமான படமாக இருந்ததாக கூறினர். அப்படி கேள்வி எழுப்புபவர்களுக்குத் தனது விளக்கத்தைக் கொடுத்துள்ளார் கோபிநாத்.
'சிம்ப்ளி பிளை' புத்தகத்தில் உள்ளது போன்ற உண்மையான விஷயங்கள் படத்தில் இல்லை என என்னுடைய பள்ளி நண்பர்கள், ஆர்மி நண்பர்கள் மற்றும் டெக்கானில் உடன் பணியாற்றியவர்கள் ஏமாற்றமடைந்ததாகச் சொன்னார்கள். சினிமா அனுபவத்துக்காக படம் கற்பனையுடன் கலந்து எடுக்கப்பட்டது என்று சொன்னேன். நல்ல இறைச்சிக்கு அடியில் மசாலா இருக்கிறது.
முற்றிலும் உண்மையாக இருந்தால் அது ஒரு ஆவணப்படம் போல இருந்திருக்கும். அதற்கும் மதிப்பு இருக்கிறது, ஆனால், அது வேறு வகை. ஒரு ஹீரோ வலிமையானவராகத் தெரியலாம், ஆனால், அது பாதிப்பானதாகவும் இருக்கும். படத்தில் ஹீரோ வெற்றி பெறுவதற்கு மனைவி மற்றும் குடும்பத்தினரின் எமோஷனல் சப்போர்ட் வேண்டும். ஹீரோவை விட மற்ற குழுவினர் பெரும்பாலும் தியாகம் செய்வார்கள்.
ஒரு மனைவி அவரது சொந்த கனவுகளை தியாகம் செய்யாமல் நாயகனின் கனவைப் பகிர்ந்து கொள்ள முடியும். அவள் தன்னை அடிபணியச் செய்யாமல், தன் சொந்த அடையாளத்தை, சுயமரியாதையை இழக்காமல் ஒரு ஆணுக்கு ஆதரவளிக்க முடியும். மாறாக கணவனுக்கு உத்வேகம் தேவைப்படும்போது அவனுக்கு ஊக்கம் கொடுத்து அந்த இடத்தை நிரப்ப முடியும். இதை அபர்ணா கதாபாத்திரம் மூலம் சுதா அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மெயின் கதையிலும் ஒருவர் விழும் போது எழுவதும் இருக்கிறது. இது தன்னைத்தானே சொல்லிக் கொள்வது போலத்தான், 'நான் தோல்வியுற்றேன், ஆனால், தோல்வியடையவில்லை.
நான் வெளியேறும் போதுதான் தோல்வியடைகிறேன். நான் விழும் போதெல்லாம் நான் எழுந்துள்ளேன். இது தொடர்ந்து இருப்பது மட்டுமல்லாமல், நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள், சூரியன் உதிக்கும், கதவுகள் திறக்கப்படும் என்று நம்புவது பற்றியதாகும். அதுதான் படத்தின் உண்மையான சித்தரிப்பு. அதை துணிச்சலாகவும், நம்பிக்கையாகவும் செய்திருக்கிறார் சூர்யா,” என மீண்டும் பாராட்டு தெரிவித்து படம் பற்றி எழுந்த சில கேள்விகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.