சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகவும் குறைவுதான். அதிலும் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காது. இருப்பினும் அடுத்தடுத்து இயக்கிய இரண்டு படங்களிலும் அதை பொய்யாக்கி இருக்கிறார் சுதா கோங்கரா.
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தபின், 2010ல் வெளிவந்த 'துரோகி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால், அப்படம் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பின் ஆறு வருடங்கள் கழித்து மாதவன் நாயகனாக நடித்த 'இறுதிச் சுற்று' படத்தைக் கொடுத்து வியக்க வைத்தார். அப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. பின்னர் அப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து இயக்கினார்.
தமிழில் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு சுதா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படம் ஒடிடியில் வெளியானாலும், நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது. தெலுங்கில் 'ஆகாசம் நீ ஹாடு ரா' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.
படத்தைப் பார்த்த பல தெலுங்கு ஹீரோக்கள் படத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சுதாவின் இயக்கத்தில் நடிக்க அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். பலரும் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து தங்களுக்கும் படத்தை இயக்கித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் தனது அடுத்த படத்தையும் தமிழில் இயக்கவே சுதா விருப்பப்படுவதாக ஒரு தகவல் வந்துள்ளது.