சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகனாகவும் பல வருடங்களாகத் தொடர்பவர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே சிலம்பரன் என்ற அவரது முழுப்பெயரை அனைவரும் சிம்பு என்று சுருக்கி எழுத ஆரம்பித்தார்கள். அது இப்போது வரையிலும் தொடர்கிறது.
நடுவில் 2010ம் ஆண்டு தன்னை எஸ்டிஆர் என்று அழைக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். எம்ஜிஆர், என்டிஆர் என்பது போல எஸ்டிஆர் எனப் பெயரெடுக்க அவர் நினைத்திருக்கலாம். அதன்பின் அவரை சிம்பு, எஸ்டிஆர், சிலம்பரசன் என அவரவர் வசதிக்கேற்றபடி சொல்ல ஆரம்பித்தார்கள்.
இப்போது தன்னை சிம்பு என்று அழைப்பதை அவர் விரும்பவில்லையாம். பத்திரிகையாளர்களிடமும் தன்னை சிலம்பரசன் அல்லது எஸ்டிஆர் என்று எழுதுங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளாராம்.
சமீபத்தில் மீண்டும் டுவிட்டரில் இணைந்த போது கூட அந்தக் கணக்கை 'சிலம்பரசன் டிஆர்' என்ற பெயரில்தான் ஆரம்பித்திருக்கிறார். சிம்பு என்கிற சிலம்பரசன் என்கிற எஸ்டிஆர் அப்பா டி.ராஜேந்தர் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கையுள்ளவர். அதனால், இந்தப் பெயர் மாற்றத்தை மீண்டும் தன் மகனிடம் சொல்லியிருக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.