Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூக்குத்தி அம்மன் 2 : ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு

20 நவ, 2020 - 08:14 IST
எழுத்தின் அளவு:
RJ-Balaji-says-he-will-make-Mookuthi-amman-sequel

நயன்தாரா நடிப்பில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கிய படம் மூக்குத்தி அம்மன். தீபாவளியையொட்டி கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. மதம் என்ற பெயரில் போலி சாமியர்களை பற்றி வெளிச்சம் போட்டு காட்ட எண்ணிய ஆர்.ஜே.பாலாஜி, இந்து மத காட்சிகளை மட்டும் திரையில் காண்பித்து, கிறிஸ்துவ மதம் தொடர்பான காட்சியை நீக்கியது சர்ச்சையானது. மேலும் படத்தில் சில காட்சிகள் இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருந்ததாக விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி சமூகவலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர், "படத்தில் ஒரு சில ரகசியங்கள் இருக்கிறது, அதை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவேளை, நாங்கள் 2 ஆம் பாகத்தை உருவாக்கும் போது அதை வெளிப்படுத்துவோம். இன்றைய காலத்தில், ஓடாத படத்தின் இரண்டாம் பாகத்தை கூட எடுக்கிறார்கள். மூக்குத்தி அம்மன் அதிர்ஷ்டவசமாக நன்றாகத் ஓடி பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே நிச்சயமாக மூக்குத்தி அம்மனின் 2 ஆம் பாகம் இருக்கும். 25ஆவது அல்லது 26ஆவது பாகத்தை உருவாக்குவது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் நிச்சயமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா - ஸ்ருதியின் புகார்கொரோனா - ஸ்ருதியின் புகார் மாலத்தீவிற்குப் பறந்த ரகுல் ப்ரீத் சிங் மாலத்தீவிற்குப் பறந்த ரகுல் ப்ரீத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
21 நவ, 2020 - 18:31 Report Abuse
Loganathaiyyan கிறித்துவ முஸ்லீம் உண்மையில் நடப்பதை காட்சிகளாய் எடுத்தால் அதற்கு எதிர்ப்போ எதிர்ப்பு இருக்கும் அதற்கு சுடலை ஜோசப் கான் கட்சி இந்து ஆனால் எதிர்க்கும் இதே இந்து எதிர்ப்பு இருந்தால் எதிர்க்காது. இதெல்லாம் வந்தது இந்துவினால் தான் Secular Tolerant ஆகா இருந்து இருந்து அப்படியே வழக்கமாகி விட்டது இந்து தான் மாற வேண்டும். இந்த மாதிரி படங்களை பார்க்காமல் இருந்தால் அவன் மூட்டை கட்டுவான்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
21 நவ, 2020 - 11:41 Report Abuse
LAX என்ன RJ..? 'பேடி' பாலாஜி
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
21 நவ, 2020 - 10:30 Report Abuse
Kalaiselvan Periasamy பாலாஜி உண்மையானவர் என்றால் மற்ற மாதத்தில் காணப்படும் இது போன்ற சம்பவங்களை படம் எடுத்து நிரூபிக்கட்டும் . படத்தில் அம்மனே பொலிவற்று தான் உள்ளார் . அம்மனாக நடித்தவர் யோகி பாபு நடித்த எமதர்ம கதாபாத்திர குப்பை போன்றே இருந்தது. மட்டமான தமிழ் சினிமா kaarargale, தயவு செய்து பக்தி படங்கள் எடுக்காதீர்கள் .
Rate this:
vijay - coimbatore,இந்தியா
21 நவ, 2020 - 08:56 Report Abuse
vijay ரெண்டாம் பாகத்திலும் ஏதாச்சும் இப்படி செஞ்சான் என்றால் அவன் படம்....
Rate this:
ravikumark - Chennai,இந்தியா
21 நவ, 2020 - 08:12 Report Abuse
ravikumark Please show your guts in the 2nd part atleast and expose conversion beggars in couple of scenes. If you fail again due to pressure from rogue converts, you are not fit to be in this industry
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in