பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தற்போது ஐதராபாத்தில் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஜித் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதால் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கார், பைக் ரேஸ் காட்சிகளும் இக்கின்றன.
ஐதராபாத்தில் நடைபெற்ற ஆக்ஷன் காட்சிக்கான படப்பிடிப்பின் போது அஜித்துக்கு லேசாக காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு வாரங்கள் ஓய்வு எடுத்தப் பிறகு அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் வலிமை படத்தின் போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.