மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு, 22ம் தேதி நடக்க உள்ளது.கடந்த முறை தலைவராக தேர்வான விஷால், இம்முறை போட்டியிடவில்லை. முரளி ஒரு அணியாகவும், டி.ராஜேந்தர் ஒரு அணியாகவும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். மும்முனை போட்டியில், தலைவர் பதவிக்கு தனியாளாக பி.எல்.தேனப்பன் போட்டியிடுகிறார்.இத்தேர்தலில், தமிழக சட்டசபை தேர்தலை மிஞ்சும் அளவுக்கு, கோடிகளில் பணம் புரளுவதாக கூறப்படுகிறது.இது குறித்து, தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் கூறியதாவது:முரளிக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பிரச்னை. அதை சமாளிக்கவே, தலைவர் பதவி தேவைப்படுகிறது. அவர் அணியில் உள்ள ராதாகிருஷ்ணனுக்கு, தி.மு.க., கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிட, 'சீட்' வேண்டும். அதற்கு முன், இதில் அவர் ஜெயிக்க வேண்டும்.டி.ஆருக்கு பணப் பிரச்னை ஏதும் இல்லை என்றாலும், மகன் சிம்பு மேல் உள்ள சில பிரச்னைகளை தீர்த்து வைக்க, பதவி தேவைப்படுகிறது.தயாரிப்பாளர் சங்கத்திற்கான பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேனப்பன் தனியாக நிற்கிறார். ஆனாலும், அவருக்கான வெற்றி வாய்ப்பு புதிர் தான்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.