இரண்டு வாரத்தில் எனிமி டீசர் | ஒரேநாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா | மண்டேலா படம் பார்த்து யோகி பாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் | பாகுபலியை ஆர்ஆர்ஆர் மறக்கடித்து விடும் : லண்டன் தணிக்கை குழு உறுப்பினர் பிரமிப்பு | ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே - கே.எஸ்.ரவிக்குமார் | என்னை திட்டாதீங்க...! - டுவிட்டரில் கெஞ்சிய நட்டி நடராஜ்! | ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போன சிரஞ்சீவி படம் | வலிமைக்காக பஸ் ஒட்டிய அஜித் | புதையலை தேடி அலையும் யோகிபாபு | படப்பிடிப்பில் ‛அண்ணாத்த' ரஜினி : போட்டோ வைரல் |
தமிழ்த் திரையுலகத்தில் சினிமா தியேட்டர்கள் கொரானோ தொற்று காரணமாக மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியாகின. இதுவரை வெளிவந்த படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளிவந்த சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' ரசிகர்களை திருப்திப்படுத்திய படமாக அமைந்தது.
படத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்கள் படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தெலுங்கு நடிகராக மகேஷ் பாபு சேர்ந்துள்ளார்.
“சூரரைப் போற்று, என்ன ஒரு எழுச்சியூட்டும் படம். அற்புதமான இயக்கம், அற்புதமான நடிப்பு. டாப் பார்மில் சூர்யா. பிரகாசிக்கிறீர்கள் பிரதர். மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.
“மிகவும் நன்றி பிரதர், டன் நன்றிகள், 'சரக்குவாரி பாட்டா'வுக்காகக் காத்திருக்கிறேன்,” என மகேஷ்பாபுவுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.