நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
தமிழ் சினிமாவில் அதிகப் பிரபலமாக இருக்கும் ஹிந்தி நடிகைகளுக்கு அவர்கள் மொழியில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். காஜல் அகர்வால், தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் தமிழில்தான் முன்னணி ஹீரோயின்கள். ஆனால், ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பெரிய அளவில் பேசப்படாமலேயே இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியரில் ஒருவராக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அவரது கனவு ஒன்று நனவாகிறது. அஜய் தேவகன் இயக்கி நடிக்கும் படமான 'மே டே' படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் தான் கதாநாயகி.
அமிதாப்புடன் நடிக்க உள்ளதைப் பற்றி, “எல்லா நடிகர்கள், நடிகைகளையும் போலவே எனக்கும் அமிதாப் அவர்களுடன் நடிக்கும் கனவு உண்டு. நான் நடிக்க வந்ததிலிருந்தே இருந்த அந்தக் கனவு இப்போது நனவாகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு 2019ம் ஆண்டில் வெளிவந்த ' டீ டீ பியார் டீ' படத்திற்குப் பிறகு மீண்டும் அஜய் தேவகனுடன் நடிக்க உள்ளார் ரகுல். அஜய்யும், அமிதாப்பும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள்.