சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரையுலகத்தினரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் 'நெற்றிக்கண்' பட டீசரையும் நேற்று வெளியிட்டார்கள். நேற்று முன்தினமே தனது காதலி நயன்தாராவின் பிறந்தநாளுக்கு 'தங்கமே பிறந்தநாள் வாழ்த்துகள்' என வாழ்த்து தெரிவித்துவிட்டார் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
நேற்று இரவு கேக் வெட்டி பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளார்கள். சிலர் அனுப்பிய பிறந்தநாள் கேக்குகள், வீட்டிற்குள் பிறந்தநாள் அலங்காரத்துடன் நயன்தாரா நிற்கும் புகைப்படம் நேற்று இரவே வைரலானது.
“அம்மா, அப்பா, லேனு குரியன் ஆகியோரிடமிருந்து அன்பான ஆச்சரியம். நீங்கள் இங்கு இல்லை வருத்தமாக இருப்பினும், மகிழ்ச்சிதான்,” என விதவிதமான எமோஜிகளுடன் அப்புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.