சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
'தர்பார்' படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்திருந்தாலும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவில்லை.
இந்த சூழலில் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரே கட்டமாக ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பை நடத்தி முடிக்க இயக்குனர் சிவா முடிவு செய்திருக்கிறார். இன்னும் ஓரிரு வாரங்களில் படக்குழு ஐதராபாத் கிளம்பும் என தெரிகிறது.
இந்த படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்க உள்ளார். எனவே அதற்கு தகுந்தாற்போன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை படக்குழு எடுத்து வருகிறது. மிக குறைவான ஆட்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.