மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பொதுவாக குறைவான அளவிலேயே படங்களை ஒப்புக்கொள்பவர் என்பதால் இந்த லாக்டவுன் சமயத்தில் வேலை இல்லாமல் இருந்தது, நடிகை பார்வதிக்கு பெரிய விஷயமாக இருந்திருக்காது. இந்தநிலையில் கொரோனா தாக்கம் மற்றும் அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இரண்டையும் மிக்ஸ் செய்து, ஒரு புதிய கதையுடன் பார்வதியிடம் வந்தார் ஒளிப்பதிவாளர் ஷானு ஜான் வர்கீஸ்.. இவர் கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவர் சொன்ன கதையை கேட்டதும் உடனே ஒகே சொல்லிவிட்டார் பார்வதி.
இந்த படத்தில் பார்வதியின் கணவராக பிரேமம் புகழ் ஷராபுதீனும் இன்னொரு ஹீரோவாக பிஜுமேனனும் நடிக்கின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக, ஊரடங்கு முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோது, அதற்கு முந்திய நாள் மும்பையில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் செல்லும் ஒரு தம்பதி சந்திக்கும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.. சக ரயில் பயணியாக நடிக்கிறார் பிஜுமேனன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் கோட்டயத்திற்கு அருகில் உள்ள பாலா என்கிற பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு புகைப்படங்களை பார்வதி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஷானு ஜான் வர்கீஸ் இயக்குனராக மாறிவிட்டதால், இந்தப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அதேபோல விஸ்வரூபம் எடிட்டரான மகேஷ் நாராயணன். தான் இயக்குனராகி விட்டாலும் கூட, தனது படங்களில் ஷானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதால், அந்த நட்புக்காக இந்த படத்திற்காக மீண்டும் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.