பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் என்பதால், இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சோஷியல் மீடியா வாழ்த்துக்களால் நிரம்பி வழிகிறது.. நயன்தாரா தற்போது பணியாற்றி வரும் படக்குழுவினரும் தங்கள் வகை பரிசாக டீசர், போஸ்டர் என வெளியிட்டு அசத்தி வருகின்றனர். அந்தவகையில் நயன்தாரா தற்போது மலையாளத்தில் நடித்துவரும் 'நிழல்' என்கிற படத்தின் குழுவினர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் நிவின்பாலிக்கு ஜோடியாக மலையாளத்தில் லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்தில் நடித்தார் நயன்தாரா. தற்போது தமிழில் பிசியாக இருந்தாலும், தாய்மொழியை மறக்காமல் கடந்த மாதம் நிழல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் நயன்தாரா. கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.. மிஸ்ட்ரி திரில்லராக இந்தப்படம் உருவாகிறது. பிரபல மலையாள எடிட்டரான அப்பு என்.பட்டாத்திரி இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.