Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிளைன்ட்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் 'நெற்றிக்கண்'

18 நவ, 2020 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Netrikkan-is-official-remake-of-Korean-film

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் முதன் முதலாக தயாரிக்கும் படம் 'நெற்றிக்கண்'. இப்படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாநாயகியாக நடிக்கிறார். இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியிட்டார்கள்.

படத்தின் டீசர் வெளியானதுமே இது 2011ல் கொரியன் மொழியில் வெளியான 'பிளைன்ட்' படத்தின் காப்பி என சர்ச்சை வந்தது. ஆனால், அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் இப்படம் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

'நெற்றிக்கண்' படத்தை இணைந்து தயாரிக்கும் கிராஸ் பிக்சர்ஸ் நிறுவனம்தான் கொரியன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வைத்துள்ளதாம். இவர்கள் ஏற்கெனவே தெலுங்கில் சமந்தா நடித்து வெளிவந்த 'ஓ பேபி' படத்தைத் தயாரித்தவர்கள். அப்படம் கொரியன் படமான 'மிஸ் கிரானி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்.

2016ல் அமிதாப்பச்சன், வித்யாபலன் நடித்து வெளிவந்த 'தீன்' படத் தயாரிப்பு மூலம் இந்நிறுவனம் இந்தியத் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளது.

இந்தியாவில் கொரியன் மொழிப் படங்கள் சிலவற்றைக் காப்பியடிப்பதைத் தெரிந்து, கொரியன் மொழிப் படங்களின் இந்திய மொழிகளின் ரீமேக் உரிமைகளை அவர்கள் வாங்கி வைத்துள்ளார்களாம்.

இனி, காப்பியடிப்பவர்கள் கவனமாகக் காப்பியடிக்கவும். உலக மொழிகளில் படங்களை எடுப்பவர்களின் பார்வை இந்தியாவின் மீது அதிக கவனத்துடன் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸால் மட்டும் சினிமா வாய்ப்பு கிடைத்து விடாது: ஷாரிக்பிக்பாஸால் மட்டும் சினிமா வாய்ப்பு ... கீர்த்தியைத் தொடர்ந்து அனுஷ்கா, சமந்தா புது முடிவு கீர்த்தியைத் தொடர்ந்து அனுஷ்கா, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in