மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கொரோனா தாக்கம் இந்தியாவில் பரவ ஆரம்பித்து கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் முடிய போகிறது... ஊரடங்கு உத்தரவால் இதை கட்டுப்படுத்த முயற்சித்த அரசு கொரோனா தாக்கத்தை ஓரளவு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இருந்தாலும் இதற்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும், அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் அரசு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் செஹாரி என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, மீடியாக்களிடம் பேசியபோது, “கொரோனாவுக்கு தடுப்பு மருந்து என்பதெல்லாம் நம்பமுடியாத பொய்.. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து என்பதே கிடையாது.. எதிர்காலத்திலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட போவதில்லை” என்று கூறி அதிர வைத்தார்.
மேலும், “இந்த கொரோனா தாக்கம் எவ்வளவு காலம் நீளும் என்பதையும் யாராலும் சொல்ல முடியாது என்பதால், மக்கள் தாங்களாகவே பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தங்களை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.