சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
த்ரிஷ்யம்-2 படப்பிடிப்பை முடித்த மோகன்லால், சற்றே ரிலாக்ஸ் செய்வதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாய் கிளம்பிச் சென்றார். அங்கே ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியை நேரிலேயே பார்த்து ரசித்தார். இந்த நிலையில், துபாயில் தற்போது தங்கியிருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை மோகன்லால் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்புக்காக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சஞ்சய் தத், குணமாகி துபாயில் இருக்கும் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக கிளம்பிச் சென்றார். சஞ்சய் தத் மீது எப்போதுமே தனி மரியாதை கொண்டுள்ள மோகன்லால், தற்போது அவர் துபாயில் இருப்பதை அறிந்து, அவரது உடல்நலம் குறித்தும் அவர் சிகிச்சை குறித்தும் விசாரிப்பதற்காக தானே நேரடியாக தேடிச்சென்று சந்தித்துள்ளாராம்.