நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
திரையுலகில் மிகவும் தைரியசாலி பெண்ணாக அறியப்படுபவர் பாடகி சின்மயி. திரைத்துறையில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சின்மயி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திரைப்படங்கள் பார்ப்பதில் நான் மிகவும் சுமாரான ஆள். சந்தோஷமான படங்களை மட்டுமே விரும்பி பார்ப்பேன். அபாயகரமான படங்களை பார்த்தால் என்னால் எளிதில் ஜீரணிக்க முடியாது. எனவே நான் நேர்கொண்ட பார்வை படத்தை பார்ப்பதற்கு பயந்தேன். ஓருவழியாக நேற்று இரவு தான் படத்தை பார்த்தேன். படத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தி என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்தது. படக்குழுவுக்கு எனது பாராட்டுகளும், அன்பும்.
அஜித் மாதிரியான ஒரு பெரிய நட்சத்திரம் இதுபோன்ற ஒரு படத்தில் நடித்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அவர் மூலமாக இந்த செய்தி பெரிய அளவில் சென்று சேரும். அதேபோல் தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பதும் மகிழ்ச்சியான விஷயம். பெண்களுக்கு எதிரான மனநிலையை இது மாற்றும்", என சின்மயி குறிப்பிட்டுள்ளார்.