பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நடிகர் சிரஞ்சீவி ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
சில தினங்கள் கழித்து சிரஞ்சீவிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்தது. ஏற்கெனவே செய்த பரிசோதனையிலும் பாசிட்டிவ் என்று தவறான முடிவு வந்ததாக சிரஞ்சீவி டுவீட் செய்தார்.
இந்நிலையில் அவர் ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 20ம் தேதி தொடங்கவுள்ளது. கொரடலா சிவா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ரெஜினா கசன்ட்ரா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.