Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுதிக் கட்டத்தில் அக்னி சிறகுகள்

17 நவ, 2020 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Agnisiragugal-in-final-stage

மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் படம் அக்னி சிறகுகள். விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷரா ஹாசன், சம்பத், சதீஷ்குமார், ரைமா சேனா, செண்ட்ராயன் உள்பட பலர் நடிகர்கள் நடிக்கிறார்கள். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். பாச்சா ஒளிப்பதிவு செய்கிறார். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார்.

தற்போது படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இதுகுறித்து நவீன் கூறியதாவது : உலகம் முழுதுமே படப்பிடிப்பு செய்வது என்பதே தற்போது மிகவும் நெருக்கடியான சூழலாக இருந்து வருகிறது. படக்குழுவின் அயராத ஒத்துழைப்பே அனைவரும் இணைந்து இயங்குவதற்கு பெரும் ஊக்கமாக இருந்தது. அக்னி சிறகுகள் படத்திற்கு இப்படியானதொரு படக்குழு கிடைத்திருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றை கோல்கட்டாவில் தற்போது படமாக்கினோம். இத்துடன் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. விஜய் ஆண்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் காட்சிகளில் வெளிப்படுத்திய அற்புத நடிப்பில் அசந்து போனேன். படத்தின் மொத்த படபிடிப்புமே பேரனுபவமாக இருந்தது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது உடனடியாக போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் துவக்கப்பட்டு விட்டது. இந்நேரத்தில் படக்குழு அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பேணும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைத்து தந்ததற்காக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்றார் த்ரிஷாகுதிரையேற்ற வீராங்கனை பட்டம் ... சென்னை மெட்ரோவைப் பாராட்டும் ஆர்யா சென்னை மெட்ரோவைப் பாராட்டும் ஆர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in