Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் படப்பிடிப்பில் சூர்யா, கவுதம் மேனன்

17 நவ, 2020 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Suriya---Gautham-menon-joints-for-Web-film

தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணி நாயகனாக இருக்கும் சூர்யாவிற்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்த 'காக்க காக்க' படத்தைக் கொடுத்தவர் கவுதம் மேனன். அதன்பின் அவர்கள் இருவரும் அடுத்து இணைந்த 'வாரணம் ஆயிரம்' படமும் ரசிகர்களைக் கவர்ந்த வெற்றிப் படமாக அமைந்தது.

அதன்பின் அவர்கள் மீண்டும் இணைவதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' படம் பூஜையுடன் நின்று போனது. அதோடு சூர்யா ஒரு அறிக்கை வேறு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதனால், இக் கூட்டணி மீண்டும் இணையுமா இணையாதா என்பது கடந்த சில வருடங்களாக அடிக்கடி பேசப்பட்டது.

இப்போது இருவரும் ஒரு வெப் பிலிமுக்காக இணைந்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அந்த வெப் தொடரின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகி உள்ளது.

அது பற்றி அதற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம், “கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வெப் பிலிம் படப்பிடிப்பில் இருக்கிறேன். இன்று செட்டில் கிரேட் எனர்ஜி ஆக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

வெப் பிலிமில் இணைந்துள்ளவர்கள் விரைவில் பியூச்சர் பிலிமில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கடலுக்கு அடியில் காஜல் அகர்வால்கடலுக்கு அடியில் காஜல் அகர்வால் குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்றார் த்ரிஷா குதிரையேற்ற வீராங்கனை பட்டம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in