சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
மோகன்லாலை வைத்து வில்லன், மிஸ்டர் பிராட் உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியவர் அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னி கிருஷ்ணன். தற்போது த்ரிஷ்யம்-2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட மோகன்லால், அடுத்ததாக பி.உன்னிகிருஷ்ணன் டைரக்சனில் தான் நடிக்க இருக்கிறார்.. இந்த படத்திற்கு ஆராட்டு என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.. வழக்கமான கமர்ஷியல் அம்சங்களுடன் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகிறது.
அதேசமயம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் ஆகிய படங்களில் பார்த்த அதே மோகன்லாலை, இந்த படத்தில் மீண்டும் அழைத்து வர இருக்கிறார் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். கிராமத்து பின்னணியில் இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம். மோகன்லாலுக்கு புலிமுருகன் என்ற வெற்றி படத்தை கொடுத்த கதாசிரியர் உதயகிருஷ்ணா முதன்முதலாக 2015ல் 'கோஹினூர்' என்கிற மலையாள படம் மூலம் தனது திரையுலக பயணத்தை துவங்கிய நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆராட்டு படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் ஐந்து வருடம் கழித்து மீண்டும் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்..