சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
இந்திய சினிமாவில் யு-டியூப் வீடியோ தளத்தை எப்படி பயன்படுத்தலாம் என 9 வருடங்களுக்கு 'கொல வெறி' பாடல் மூலம் காட்டியது தனுஷ், அனிருத் கூட்டணி. அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொல வெறி' பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகி வட இந்தியாவிலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றது.
அந்தப் பாடலை வைத்து பலரும் அதே பாடலைப் பாடி வீடியோக்களை வெளியிடும் அளவிற்கு புகழ் பெற்றது. வட இந்திய டிவி சேனல்கள் கூட தனுஷ், படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரை பேட்டிகள் எடுத்தன.
இன்றுடன் 'கொல வெறி' பாடல் வெளிவந்து 9 ஆண்டுகள் ஆகிறது. 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி யு டியூபில் வெளியானது இப்பாடல். அதே தினத்தில் 'ரௌடி பேபி' பாடலும் 1 பில்லியன் சாதனையைப் படைத்திருப்பது ஆச்சரியம் தான்.
“என்ன ஒரு இனிமையான ஒற்றுமை. 'கொலவெறிடி' பாடல் வெளியான 9வது ஆண்டு தினத்தில் 'ரௌடி பேபி' பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது. தென்னிந்திய அளவில் முதல் முறையாக 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளதற்கு நாங்கள் கௌரவமாக நினைக்கிறோம். எங்கள் மொத்த குழுவும் எங்கள் இதயத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.