Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் மூக்குத்தி அம்மன்

16 நவ, 2020 - 14:44 IST
எழுத்தின் அளவு:
Mookuthi-Amman---why-balaji-did-this?

சென்னை : மூக்குத்தி அம்மன் படம் மூலம் மதம் என்ற பெயரில் போலி சாமியர்களை பற்றி வெளிச்சம் போட்டு காட்ட எண்ணிய ஆர்.ஜே.பாலாஜி, இந்து மத காட்சிகளை மட்டும் திரையில் காண்பித்து, கிறிஸ்துவ மதம் தொடர்பான காட்சியை நீக்கியது சர்ச்சையாகி உள்ளது.

ஆர்ஜே பாலாஜி, சரவணன் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடித்து கடந்த வாரம் ஓடிடியில் வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் இந்து போலி சாமியார்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை வைத்து கதையை அமைத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்படும் இரண்டு இந்து சாமியார்களை மையமாக வைத்து படத்தில் ஒரு நெகட்டிவ் சாமியார் கதாபாத்திரத்தை உருவாக்கி கிண்டலடித்திருந்தார்கள்.





இந்நிலையில் படம் ஓடிடியில் வெளியாவதற்கு முன்பு, கிறிஸ்துவ போலி மத போதகர்கள் செய்யும் விஷயத்தை வைத்து கிண்டலடித்து இப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை யு டியுபில் ஸ்னீக் பீக் 2 என வெளியிட்டிருந்தார்கள். அதில் மதபோதகராக இருக்கும் மனோபாலா மதப்பிரசங்க மேடையில் காட் இஸ் காலிங் எனச் செய்யும் போலியான விஷயங்களைப் பார்த்து அம்மனாக இருக்கும் நயன்தாரா, கயவர்கள் முடிவில்லா தண்டனையை அனுபவிப்பார்கள், ஜீசஸ் என்னுடைய பிரண்டுதான் என வசனம் பேசுவதாக இருந்தது.

படம் வெளியான பின் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை. சினிமாவில் கடவுள் சம்பந்தப்பட்டு கிண்டலடிக்கும் காட்சிகளை வைப்பதென்றால் இந்து மதம் சம்பந்தமாக மட்டுமே கிண்டலடிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. மற்ற மதங்களில் உள்ள போலி ஆசாமிகளைக் கிண்டலடிக்க மிகவும் தயங்குகிறார்கள் என்ற பேச்சும் உண்டு.




ஸ்னீக் பீக் ஆக வெளியான காட்சியை படத்திலிருந்து ஆர்ஜே பாலாஜி நீக்கியது பாகுபாடான விஷயமென கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மற்ற மதங்ககளைப் பற்றி கிண்டலடித்தால் அம்மதத்தினரின் மத உணர்வு பாதிக்கப்படுகிறது, இந்து மதத்தைப் பற்றிக் கிண்டலடித்தால் அவர்களது மத உணர்வும் பாதிக்கப்படாதா என கேள்வி பலரும் எழுப்பி வருகிறார்கள்.

கடும் சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி இருந்தால்தானே சர்ச்சை எழுப்புவீர்கள் என, தற்போது யு டியூபில் இடம் பெற்றிருந்த போலி மத போதகரின் ஸ்னீக் பீக் 2 காட்சியை நீக்கிவிட்டார்கள்.

ஆர்ஜே பாலாஜிக்கும், படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு முக்கிய புள்ளி போன் செய்து அந்தக் காட்சியை நீக்கும்படி சொன்னார், அதனால்தான், படத்திலிருந்தும், யு டியுபிலிருந்தும் காட்சியை நீக்கிவிட்டார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் மாநாடு பர்ஸ்ட் லுக்!விரைவில் மாநாடு பர்ஸ்ட் லுக்! 100 கோடி சாதனையைத் தொட்ட 'ரௌடி பேபி' 100 கோடி சாதனையைத் தொட்ட 'ரௌடி பேபி'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Jayasankar Sundararaman - Chennai,இந்தியா
29 நவ, 2020 - 20:38 Report Abuse
Jayasankar Sundararaman RJ Balaji , பட தயாரிப்பாளர் கோழைகள்.. ஹிந்துக்கள் என்றால் கிள்ளுக்கீரை. .போலி சாமியார்கள் கிறிஸ்துவ மதத்திலும் உள்ளார்கள் . அதை சொன்னால் என்ன தப்பு..
Rate this:
RathinamRaju - திண்டுக்கல்,இந்தியா
28 நவ, 2020 - 07:14 Report Abuse
RathinamRaju மனோபாலா நிகழ்ச்சி ஏன் தவிர்க்கப்பட்டது? கண்டிப்பாக சேர்த்திருக்கப் பட்டிருக்க வேண்டும்.. விழிப்புணர்வும், பகுத்தறிவும் பொதுவானது.
Rate this:
16 நவ, 2020 - 22:31 Report Abuse
Ranjit Kumar இந்துக்களுக்கு இந்துக்களே முதல் எதிரி..
Rate this:
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
17 நவ, 2020 - 21:21Report Abuse
SexyGuy .ஆமாம் ராஜ்குமார், தலித் மக்களுக்கு மேல் தட்டு மக்கள் தான் எதிரி....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in