மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
அந்த நடிகர் தற்போது மனம் திருந்தி பழைய மாதிரி உடல் இளைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். ஊரடங்கு முடிந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதும், அசுர வேகத்தில் கிளம்பிய நடிகர் ஒரு படத்தை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டு அடுத்தப்பட வேலைகளை பார்க்க போய்விட்டார். இந்த விஷயம் கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இழந்த மார்க்கெட்டையும், ரசிகர்களையும் வம்பு நடிகர் மீண்டும் பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை திரைத்தறையினருக்கு வந்துள்ளது. எனவே அவரைத் தேடி புதிய பட வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறன்றன. ஆனால் ஆரம்பத்தில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என ஒவ்வொரு படத்தையும் மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கிறாராம்.
இந்த சூழலில் மார்கெட் காலியாகிவிட்ட அவருடன் நடித்த முன்னாள் நடிகைள் சிலர், நடிகரை தொடர்பு கொண்டு பழைய நட்பை புதுப்பிக்க நூல்விட ஆரம்பித்திருக்கிறார்களாம். ஆனால் அவர்களை நைசாக பேசி கழற்றி விட்ட நடிகர், இனி படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது என உறுதியாக இருக்கிறாராம்.