மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பால் காலமானார். இலங்கை வாழ் தமிழரான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில், தனது தந்தை மரியநேசன் குடும்பத்தைப் பிரிந்து, கனடா நாட்டில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு தன் தந்தையை மிகவும் பிடிக்கும் என கூறியிருந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு அவரது தந்தை திடீரென வந்ததது, அவருக்கே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அப்போது கவின் உடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தை ஒரு தந்தையாக கண்டித்தார் மரியநேசன். பின் தன் நிலையை உணர்ந்து அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு கண்கலங்கினார். இந்த நிகழ்வுகள் அப்போது அந்த நிகழ்ச்சியை பார்த்த பலரையும் கண்கலங்க செய்ததது. அந்த நிகழ்ச்சிக்கு பின் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாகிவிட்டார். பிரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங் உடன் நடித்து வருபவர், அந்தப்படம் முடியும் முன்பே அடுத்தடுத்து இரண்டு பட வாய்ப்புகளை பெற்றார்.
இந்நிலையில் கனடாவில் இருந்த மரியநேசன், நேற்று இரவு மாரடைப்பு காரணமாக இறந்தார். இதுப்பற்றி லாஸ்லியா தனது டுவிட்டரில் தந்தையின் படத்தை பகிர்ந்து மனமுடைந்துவிட்ட எமோஜியை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஏராளமான ரசிகர்களும், திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மரியநேசனின் உடல் கனடாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் வசித்து வந்த லாஸ்லியா தந்தை மறைவை அடுத்து இலங்கை சென்றுள்ளார்.
சேரன் இரங்கல்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இயக்குனர் சேரனை, தனது அப்பா போன்று பாவித்தார் லாஸ்லியா. இப்போது அவரின் தந்தை இறந்த செய்தி அறிந்த சேரன் டுவிட்டரில், “லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.