புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
இயக்குனர் செல்வராகவன் முதன்முறையாக நடிகராக களமிறங்கி உள்ள படம் 'சாணிக் காயிதம்'. இதில் முதன்மை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது மற்றுமொரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் தனுஷ் வெளியிட்டார். அதில் செல்வாவும், கீர்த்தியும் ரத்த கரையுடன் குற்றவாளிகளாக அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது போன்று இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் படத்தில் இவர்கள் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்களாக இருக்கலாம் என தெரிகிறது. படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.