பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் டீசர் சற்று முன்னர் யு டியுபில் வெளியானது.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால், அந்த அனுபவம் எப்படியிருக்கப் போகிறது என்பதற்கான அறிகுறி இன்று(நவ., 14) வெளியான டீசரிலேயே தெரிந்துவிட்டது.
விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த 'மாஸ்' இந்த 'மாஸ்டர்' டீசரில் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. ஜேடி என்கிற கல்லூரி பேராசியராக விஜய் நடிக்கிறார். கல்லூரியில் நடக்கும் ஒரு சில விஷயங்களை எதிர்க்கிறார். அதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான் என்பது மட்டும் இந்த டீசரைப் பார்க்கும் போது புரிகிறது.
டீசரின் கடைசியில் விஜய் சேதுபதியின் ஏளமானப் பார்வையும், விஜய்யின் வெறித்தனமான பார்வையும் படத்தில் அதிக ஆக்ஷன்கள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மாளவிகா மோகனன் ஆங்காங்கே வந்து போகிறார். கூட்டத்தில் சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோரை மட்டும் அடையாளம் காண முடிகிறது.
மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் போது அவர்களது ரசிகர்களின் பல்ஸ் அறிந்து படம் கொடுப்பவர் தான் மாஸ் இயக்குனராக முடியும். அதை லோகேஷ் கனகராஜ் சரியாகச் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.
கமல்ஹாசன் நடித்து 1995ல் வெளிவந்த 'நம்மவர்' சாயல் ஆங்காங்கே வந்து போகிறது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். மற்றபடி, மாஸ்டர் டீசர்...மாஸ் ஆன டீசர்...